தேவகோட்டை,--தேவகோட்டை முருகன்கோயில்களில் முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நகர சிவன் கோயிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் முருக பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தண்டாயுதபாணி மலைக்கோயிலில் பாலதண்டாயுதபாணி, நித்தியகல்யாணி கைலாசநாதர் கோயிலில் சுப்பிரமணியர், பாலமுருகன் கோயில், பழனியாண்டவர் கோயில், நித்தியகல்யாணி புரத்தில் உள்ள சவுபாக்ய துர்கை அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.