விழுப்புரம் : விழுப்புரத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசாருக்கான குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தேவராஜ், கோவிந்தராஜ், அரசு குற்ற தொடர்புத் துறை உதவி இயக்குனர் செல்வராஜ் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் கடந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும், அதனைத் தடுக்கும் நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், சட்டப்பூர்வ ஆலோசனை வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் கஞ்சா, குட்கா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.