கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் மாவட்ட தமிழ் அமைப்பு சார்பில் இலக்கிய கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் தொடக்க பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, துரைமுருகன் தலைமை தாங்கினார். ராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சீத்தா, அய்யா மோகன், முத்தமிழ்முத்தன், கலிய செல்லமுத்து, அம்பேத்கர், கதிர்வேல், கோவிந்தன், பாரதி கிருஷ்ணன், நாராயணசாமி, ஆராவமுதன், மலரடியான், ஜெயராமன், சாந்தகுமார் சொற்பொழிவாற்றினர்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை முன்னாள் செயலாளர், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாவலர் நாராயணசாமி, பழனிவேல், பேராசிரியர் ஜெயம், கவிஞர் சிவப்பிரகாசம், கவிஞர்கள் புகழேந்தி, இளையாப்பிள்ளை, முத்துக்கருப்பன், அவ்வை கல்யாணி, மகேந்திரன் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் நன்றி கூறினார்.