திருக்கனுார், : வம்புப்பட்டு கிராமத்தில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை அங்காளன் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.
திருபுவனை தொகுதி வம்புப்பட்டு கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுப்பணித்துறை மூலம் ரூ.9.92 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தம், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பிரபாகரன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.