விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் சி.ஐ.டி.யூ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் அந்துவான்சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட தலைவர் முனுசாமி, செயலாளர் வீரபாண்டி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி வாழ்த்திப் பேசினர்.
கூட்டத்தில், தமிழக அரசுத்துறை அலுவலர்கள் ஊதியம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள, மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் அலுவலகங்களில் காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பதவி உயர்வில் புள்ளியியல் உதவி ஆய்வாளர்களாக பணியேற்றுள்ளவர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்க வேண்டும்.
கோரிக்கைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு, 3 மாதத்திற்கு ஒருமுறையும் 6 மாதத்திற்கு ஒருமுறையும், அரசு செயலருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், கோட்டம் மற்றும் வட்டாரங்களில், புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.