திருவெண்ணெய்நல்லுார் : மகளைக் காணவில்லை என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகள் ஷீபா, 20; திருவெண்ணெய்நல்லுார் அரசு கல்லுாரியில் பி.காம்., 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 30ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரம்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து வீரன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.