விக்கிரவாண்டி : கரும்பு சாகுபடிக்கு அதிக லாபம் தரும் தொழில் நுட்பமான சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்திட வேண்டுமென முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளளது.
கரும்பு விரிவாக்கத்துறை அறிக்கை
முண்டியம்பாக்கம், செம்மேடு சர்க்கரை ஆலைக்குட்பட்ட கிராமங்களில் தற்போது கரும்பு நடவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாகுபடி செலவில் அதிக மகசூல் மற்றும் லாபம் தரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான சொட்டுநீர் பாசன முறை மிகவும் முக்கியமானதாகும்.
இந்த முறையால் பாசன நீர் சேமிப்பு, களை கட்டுப்பாடு, விதை கரும்பின் தேவை குறைவு, உரசத்துக்கள் நேரடியாக பயிரின் வேர் பகுதியில் கொடுக்கப்படுவதால் உரம் வீணாவது தடுக்கப்படுகிறது.
இம்முறையில் ஆட்கள் தேவை குறைவு, இயந்திரம் மூலம் இடை உழவு மற்றும் அறுவடைக்கு சாத்தியமானது.
துரிதமான சீரான கட்டைக் கரும்பு வளர்ச்சி, அதிக மகசூல் தரும் தொழில்நுட்பம் ஆகும்.
நடப்பு 2022-23 நிதியாண்டிற்கு நிலத்தடி சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு கூடுதல் மானியத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
எனவே, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயனடையலாம். சந்தேகங்களுக்கு கரும்பு கோட்டை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.