புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில் மாநில காங்., நிர்வாகிகள் நடைபயணம் சென்றனர்.
ராகுல் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் சென்றார்.
இதையடுத்து, அகில இந்திய காங்., அனைத்து மாநிலங்களிலும் 'கையோடு கை கோர்ப்போம்' என்ற நடைபயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இதையொட்டி, புதுச்சேரி பிரதேச காங்., சார்பில், இங்குள்ள 23 தொகுதிகளிலும், தொகுதி வாரி யாக ஒற்றுமை நடைபயணம் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, முத்தியால்பேட்டை தொகுதியில் நேற்று நடைபயணம் துவங்கியது.
முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே துவங்கிய நடைபயணத்திற்கு மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
இதில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், பொது செயலாளர்கள் தனுசு, இளையராஜா, திருமுருகன், வேல்முருகன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நடைபயணத்தில் நிர்வாகிகள் முத்தியால்பேட்டை முழுவதும் சென்றனர்.
அப்போது நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு கூறிய திட்டங்கள் நிறைவேற்றாதது சம்பந்தமான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் லட்சுமிகாந்தன், பொதுச் செயலாளர் ஆனந்தபாபு, இளைஞர் காங்., மாநில பொது செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் பிரியன், வட்டார இளைஞர் காங்., தலைவர் பிரசன்னா, ராஜேந்திரன் ஆகியோர் செய்தனர்.