திண்டுக்கல் : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு மருத்துவக்கல்லுாரி முதலர்வர் ராஜஸ்ரீ துவக்கி வைத்தார்.
ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் வழியாக மருத்துவமனையை வந்தடைந்தது. மருத்துவக்கல்லுாரி பயிற்சி மருத்துவர்கள், அரசு,தனியார் கல்லுாரி செவிலியர் மாணவர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரமணி, கிளை சங்க தலைவர் மகாலட்சுமி, பொருளாளர் வெஷ்லி, டாக்டர்கள், அன்புச்செல்வன், சுனிதா பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சங்க செயலாளர் டாக்டர் ஜோசப்கிறிஸ்டோபர் பாபு செய்திருந்தார்.