தேவாரம், : தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் 51. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை பண்ணையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 4000 பிராய்லர் கோழிகள், குஞ்சுகள் தீயில் கருகி இறந்தது. தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.