கோவை : சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், 2.19 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.73 கிலோ தங்கம் கடத்தி வந்த மூன்று பயணிகளை வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு, 'ஸ்காட் ஏர்வேஸ்' விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளில் மூவரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக இருந்தது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். மூவரும், உள்ளாடைகள் மற்றும் ஆசனவாயில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், திருச்சியை சேர்ந்த அபுபக்கர் சித்திக், 34, பிரியா,36, கோவையை சேர்ந்த ஸ்ரீமதி,29 எனத் தெரிந்தது. மூவரும் சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்ததும் உறுதியானது.
இவர்களிடம் இருந்து, 3.73 கிலோ எடையிலான, 2.19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.