கூடலுார் : கேரளாவிலிருந்து, நீலகிரி மாவட்டம் கூடலுாருக்கு, புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கேரளாவிலிருந்து கூடலுாருக்கு, எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியில் நடத்திய சோதனையில், 1500 பாக்கெட்டில் 100 பண்டல் கொண்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், கேரளா மாநிலம் மம்பாடு பகுதியை சேர்ந்த அஸ்கர், 37, முஜிப்பூர் ரகுமான், 32, ஆகியோரை கைது செய்தனர்.