பந்தலுார் : நீலகிரியில் நெய் மிளகாய் கிலோவுக்கு, 500 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலுார், பந்தலூர் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த மிளகாய் நெய் மணம் வீசுவதுடன் அதிக காரத்தன்மை கொண்டுள்ளதால் உணவில் விரும்பி சேர்க்கப்படுகிறது.
தற்போது, பந்தலுார், கூடலுார் பகுதிகளில் விவசாயிகள் சராசரியாக, 2 டன் அளவுக்கு உற்பத்தி செய்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
பந்தலுாரில் நெய் மிளகாய் கிலோ, 500 ரூபாய் வரை விற்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.