பெரியகுளம் : வடுகபட்டியில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெருமானின் 200 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வள்ளலார் நகரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் பல ஆண்டுகளாக தினமும் மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்து வருகிறது. நேற்று தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா காலை 5:30 மணிக்கு அகவல்பாராயணத்தோடு துவங்கியது. காலை 10:15 மணிக்கு சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது.
காலை 11:40 மணிக்கு திரை விலகி தைப்பூசம் ஜோதி வழிபாடு நடந்தது. தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், காலையில் இருந்து மாலை வரை அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். டேராடூன் கலெக்டர் ரவிச்சந்திரன், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம், ஆன்மிக ஆர்வலர்கள் அழகர், திருப்பதி, பாலா, சிவராமன், ஆதி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தலைவர் ரத்தினவேல், செயலாளர் வீரபுத்திரன், பொருளாளர் வாசுமணி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.