திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயகர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை சார்பாக, 'கணினி வழி ஊடுருவுதல் தொடர்பான நெறிமுறைகள்' எனும் தலைப்பில் 2 நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர்விஜயராகவன், முதல்வர்வெங்கடேஸ்வரன், உள்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு பங்கேற்றனர்.
துறைத்தலைவர் தேவிகா முன்னிலை வகித்தார் கிரியவன் சைபர் பாரன்சிக் சர்வீஸ் இயக்குநர் அசோக்குமார்மோகன் பேசினார். பேராசிரியர்கள் சந்தியா, பாலப்பிரியா ஒருங்கிணைத்தனர்.