பேரையூர் : டி.கல்லுப்பட்டியில் பேரையூர் தாலுகா வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு பருப்பு பதனிடும் ஆலை துவக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பாசி, உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்புகளை பதப்படுத்தி, சுத்தம் செய்து சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர்.
அதன்பின் கடந்த ஐந்து ஆண்டுகளாக பூட்டிய நிலையில் உள்ளது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட அந்த ஆலை வீணாக உள்ளது.
விவசாயிகள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த ஆலையை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.