சூலூர்:கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,வில் புதிதாக மண்டல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா, மண்டல் தலைவர்களாக புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
காரமடை தெற்கு மண்டலுக்கு விஜயகுமாரும், காரமடை வடக்கு மண்டலுக்கு சுரேஷ்குமாரும் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடலூர் நகர் மண்டலுக்கு மகேந்திரனும், சூலூர் கிழக்கு மண்டலுக்கு ரவிக்குமாரும், சுல்தான்பேட்டை மண்டலுக்கு சம்பத்குமாரும் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.