மேட்டுப்பாளையம்;காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் 17ம் ஆண்டு விழாவை அடுத்து, கல்விக் கடவுள் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடந்தது.
காலை, 4:30 மணிக்கு சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடந்தது அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமிஹயக்ரீவர் ஹோமம், திருமஞ்சனம், நெய்வேத்தியம், மகா தீபாராதனை என, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு காலை, 9.30 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு பூஜையில் வைத்து வழிபட்ட, பேனாக்கள், பென்சில்கள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளியின் தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயகண்ணன், பள்ளி முதல்வர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.