சூலூர்:ஊத்துப்பாளையம் ஏ.ஜி.எஸ்., பிரைமரி பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
அரசூர் ஊத்துப்பாளையத்தில் உள்ள ஏ.ஜி.எஸ்., பிரைமரி பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகாசன போட்டிகள் நடந்தன. குழந்தைகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில், குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெற்றோர், ஆசிரியர்கள் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
கோவை பாய்ஸ்ட்ரஸ் கிளப் நிறுவனர் வேலாயுதம், பள்ளியின் தாளாளர் கோமதி, முதல்வர் பிரியங்கா ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.