பெ.நா.பாளையம்;தமிழகம் முழுவதும் குடல் புழு நீக்க சிறப்பு முகாம் பிப்., 10ம் தேதி நடக்கிறது. சுகாதார துறை சார்பில், தேசிய குடல் புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்., 10 ஆக., 10 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த இரு நாட்களிலும், நாடு முழுவதிலும், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு 'அல்பெண்டசோல்' எனப்படும் குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மாத்திரைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.