வில்லியனுார், : திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் அகமவிதிப்படி மேற்கு பார்க்கும் வினாயகர்,முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புதிய ஆலயம் அமைத்து கும்பாபிேஷகம் நடந்தது.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் காசியிலும் வீசம் அதிகம் என்று அழைக்கப்படும் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆகமவிதிப்படி தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் துவாரக வினாயகர் மற்றும் முருகனுக்கு தனி சிலையுடன் ஆலயம், உள் வளாகத்தில் சரவேஸ்வரர் மற்றும் பள்ளி அறை ஆகிய சன்னதிகள் புதியதாகஅமைத்துள்ளனர்.
புதிய ஆலயங்களுக்கு கும்பாபிேஷக விழா கடந்த 3ம் தேதி காலை கணபதி பூஜையுடன் துவங்கியது.
அன்று மாலை முதற்கால யாக பூஜை, 4ம் தேதி காலைஇரண்டாம் காலயாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை,நேற்று காலை 6:00 மணியளவில் நான்காம் காலயாக பூஜை நடந்தது.
காலை 10:00 மணியளவில் விமானங்களுக்கு கும்பாபிேஷகம், 10:15 மணியளவில் மூலவர்களுக்கு கும்பாபிேஷகம்மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணியளவில் சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் பள்ளியறை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஆலய அர்ச்சகர் சரவணன் தலைமையில் நடந்த கும்பாபிேஷக விழாவில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார்,கோவில் சிறப்பு அதிகாரிகள் சீத்தாராமன், அறங்காவலர் குழு நிர்வாகிகள் செல்வம், நடராஜன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.