வில்லியனுார் : வில்லியனுார் அடுத்தகூடப்பாக்கம் கிராமத்தில்உள்ள நிமிலீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளமுருகன் சன்னதியில் தைப்பூச விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு, காவடி எடுத்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தி டிராக்டர்,கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை இழுத்துச் சென்றுநேர்த்திக் கடன் செலுத்தினர்.
சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளானபக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள்செய்திருந்தனர்.