விருத்தாசலம் : விருத்தாசலம் வயலுார் அரசு துவக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனை மற்றும் டி,கே.ஒய்., ஹெல்த் கேர் கன்சல்டன்சி, மங்கலம்பேட்டை ஜே.சி.ஐ., ஆகியன சார்பில், நடந்த முகாமிற்கு, நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சேகர் முகாமை துவக்கி வைத்தார்.
இதில், தி.மு.க., பிரதிநிதி ரங்கராஜ், இல்லம் தேடி கல்வி பயிற்றுனர் ஆனந்தி ஜம்புலிங்கம், உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், கண், தோல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.