விருத்தாசலம், : விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில், தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், வட்டார மருத்துவம் சாரா, மேற்பார்வையாளர் செல்லதுரை தலைமையிலான மருத்துவ குழுவினர், பீங்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழுநோய் பாதிப்பு, அதனை குணப்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.