வானுார் : கிளியனுாரில் விமலா சக்ரபாணி மஹால் திறப்பு விழா நடந்தது.
கிளியனுாரில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில், புதிதாக விமலா சக்ரபாணி மஹால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார். சக்ரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், ராமதாஸ், கண்ணன், மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் முரளி ரகுராமன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். கதிரவன், நிரஞ்சினி, பிரபு, எழிலிசை வல்லபி ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர்.