மந்தாரக்குப்பம், : வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சுக்கு பால் வழங்கப்பட்டது.
வடலுார் 152 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதையொட்டி வடலுார் சபையில் உள்ள டி.ஆர்.சாந்தி பர்னிச்சர் நிர்வாகம் சார்பில் நேற்று பால், பழசாறு வகைகளை அரிமா சங்க மாவட்ட தலைவர் ராஜமாரியப்பன் பக்தர்களுக்கு வழங்கினார்.
மேலும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கடலுார் மாவட்டம் சார்பில் டி.ஆர்.எம்., சாந்தி திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட அய்யப்ப சேவா சங்க அன்னதான குழு தலைவர் ராஜமாரியப்பன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
சாந்தி ராஜமாரியப்பன், மேலாளர் கார்த்திக், அலுவலக ஊழியர்கள் கணேசன், ஜீவானந்தம், உட்பட பலர் பங்கேற்றனர்.