கடலுார், : கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவிலில், அரோகரா கோஷம் முழங்க கும்பாபிேஷகம் நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார் புதுவண்டிப்பாளையத்தில் 300 ஆண்டுகள் பழமையான சிவசுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள பாலவிநாயகர், ஏழை மாரியம்மன் கோவில்களுக்கும் திருப்பணி செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், இடும்பன், பழனி ஆண்டவர், ஆறுமுகசாமி, விநாயக முருகன், கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, சிவன், பார்வதி, நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், வீரபாகு என, அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த மாதம் 27 ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள துவங்கியது. கடந்த 1ம் முதல் கால யாகசாலை பூஜை துவங்கி நடந்து வந்தது.
கும்பாபிேஷக தினமான நேற்று காலை 8ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி, 8:00 மணியளவில், பாலவிநாயகர் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்விக்கப்பட்டது.
அதையடுத்து, 10:00 மணியளவில், கோவில் ராஜகோபுர விமானங்கள் மற்றும் சுப்ரமணியர் சாமி சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து 108 கலச பூஜை நடந்தது.
இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம், சாமி வீதியுலா நடந்தது. மாலை தேச மங்கையற்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
கும்பாபிேஷக விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., லீமா அய்யப்பன், மேயர் சுந்தரிராஜா, ஜி.ஆர்.கே., குழு நிர்வாக இயக்குனர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ், டாக்டர் பிரவீன் அய்யப்பன், வழக்கறிஞர் சிவமணி உள்ளி்ட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷக ஏற்பாடுகளை கோவி்ல் விழாக்குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.