புதுச்சேரி : கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா, வரும் 10ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் செடல் திருவிழா பிரசித்திப் பெற்றதாகும்.
இந்த திருவிழாவில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்தாண்டு, செடல் திருவிழா, கடந்த 2ம் தேதி, கரக உற்சவத்துடன் துவங்கியது.
தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், வீதியுலாவும் நடந்து வருகிறது. வரும் 9ம் தேதி, முத்துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. அடுத்த நாள் 10ம் தேதியன்று, செடல் திருவிழா நடக்கிறது.
ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்பெரும்ஜோதி, துணைத் தலைவர் நிர்மலா, செயலாளர் பழனி, பொருளா ளர் சந்திரசேகரன், உறுப்பினர் முருகையன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.