குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த, வடக்கு பள்ளி நீரோடை, மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்,50. விவசாயி. இவர், கடந்த, 24ம் தேதி தனது பைக்கில் வயலுக்கு சென்றார். வயல் அருகே தனது, பைக்கை (டி.என் 31-சிஏ-1079) நிறுத்தி பூட்டிவிட்டு சென்றார். திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. அவர், அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.