விழுப்புரம் : கோழிச் சண்டை நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அய்யூர் அகரம் ஏரியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அன்பு, 21; சதிஷ், 26; காகுப்பம் ராமச்சந்திரன், 21; சூர்யா, 26; வி.மருதுார் பிரபாகரன், 22; புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் சங்கர், 26; கீழ்பெரும்பாக்கம் பிரகாஷ், 21; ஆகியோர் கோழிச் சண்டை நடத்தியது தெரியவந்தது. உடன், அன்பு உட்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.