கடலுார் : சிலம்பிநாதன்பேட்டை மனுநீதிநாள் முகாமில், வேளாண் மாணவர்களின் உழவர் கண்காட்சி நடத்தப்பட்டது.
பண்ருட்டி அருகே சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில், மனுநீதிநாள் முகாம் நடந்தது. அதில், தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லுாரி மாணவர்கள், ஊரக வேளாண் பணி திட்டத்தின் கீழ் உழவர் கண்காட்சி வைத்தனர்.
அப்போது, டிரோன் மூலம் பூச்சி மருந்துக்களை தெளிப்பது பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
கண்காட்சியை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். பண்ருட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலரும் பங்கேற்றனர். கண்காட்சியில் ஒருங்கிணைந்த பண்ணை, பயிறு வகைகளில் புஷ் மற்றும் புல் மாதிரி மற்றும் பாலி ஹவுஸ் மாதிரிகள் முதலியன விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.