பாகூர், : பிள்ளையார்குப்பம் கிராமத்தில், எவர்கிரீன்தொண்டு நிறுவனம் சார்பில், முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள எவர்கிரீன் தொண்டு நிறுவனம், பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, கந்தன்பேட் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு, தினசரி மதிய உணவு அளிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, வள்ளலார் பிறந்த நாளான நேற்று பிள்ளையார்குப்பம் பேட்டில் இத்திட்டம் துவங்கப்பட்டது. எவர்கிரீன் நிறுவனர் ரமேஷ் முன்னிலையில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மதிய உணவு வழங்கிடும் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.