கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த வடமருதுார் கிராமத்தில் டிராக்டர் டிப்பரில் மணல் கடத்துவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடமருதுார் வி.ஏ.ஓ., சிவசுந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அதில் அதே ஊரைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் செந்துாரபாண்டி,21; என்பவர் டிராக்டர் டிப்பரில் மணல் கடத்தியது தெரிந்தது. வி.ஏ.ஓ., புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் செந்துாரபாண்டி மீது வழக்குப் பதிந்து டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.