கள்ளக்குறிச்சி : மதுபானம் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை 9:00 மணிக்கு சந்தைப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கே ஒரு வீட்டின் முன் அனுமதியின்றி ஜெயராமன் மனைவி ஜெயா,60; என்பவர் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தது.
திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஜெயாவை கைது செய்து அவரிடமிருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.