திட்டக்குடி,: திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி பார்வதி, 60. இவர், காலை வயல் வேலைக்காக சென்றுவிட்டார். மதியம் 3:00 மணிக்கு அவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தீயைஅணைத்தனர். இதில் 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது.