கடலுார், : போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 7ம் தேதி, கடலுார் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் துவங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில்,பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கான(தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர்கள் மற்றும் ஹவால்தார் போன்றபணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும் முதல் முறையாக பணியாளர் (எஸ்.எஸ்.சி.)தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் எனஅறிவித்துள்ளது.
இந்த பணிக் காலியிடங்களுக்கு https://ssc.nic.in என்ற தேர்வாணையஇணையதளம் வாயிலாக வரும் 17ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில் வரும் 7ம் தேதி துவங்குகிறது.
இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:30 மணிமுதல் பகல் 1:30 மணி வரை நடத்தப்படும். பயிற்சி வகுப்பில்கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தை மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோஅல்லது 94990 55908 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டோபதிவு செய்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.