குள்ளஞ்சாவடி : மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
குள்ளஞ்சாவடி அடுத்த, மதனகோபாலபுரம், ஆர்.சி., காலனியை சேர்ந்தவர், அருள்நாதன், 40. இவரது மகள், ஜெனிபர் மேரி, 25. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஜெனிபர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து ஜெனிபர் திடீரென மாயமானார். பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை,
இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.