திருவண்ணாமலை : தை பவுர்ணமியை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
கிரிவலப் பாதையின், 14 கி.மீ., துாரத்தை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மற்றும் கிரிவலப்பாதையிலுள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டனர்.
முன்னதாக, கிரிவலம் செல்ல தொடங்கும் முன், அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில், நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வணங்கினர்.