ஓசூர்: ஓசூரில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகர், 7வது குறுக்கு தெருவில், அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் வரம் மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து பேசினார்.
முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை கட்டிகள், வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய், கர்ப்பப்பை அடி இறங்குதல், கர்ப்பப்பை வாய் புண், சினைப்பை நீர் கட்டி, குழந்தையின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு, டாக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.