ஓசூர்: தளி அடுத்த மதகொண்டப்பள்ளி பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 21ல், பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம், 2:04 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தளி, இ.கம்யூ., -எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உற்சவமூர்த்திகளுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர், நாமல்பேட்டை நஞ்சுண்டேஸ்வர சுவாமி தேர்த்திருவிழா கடந்த, 3ல் துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 10ல், பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
ஓசூர் அடுத்த அகரம் பால
முருகன் கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 2ல் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு மேல், தைப்பூச தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 8ல், விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. பாகலுார் அடுத்த குடிசெட்லு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன திம்மராய சுவாமி தேர்த்திருவிழா கடந்த, 1ல் துவங்கியது. நேற்று மதியம், 12:20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.