ப.வேலுார்: கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக
நடந்தது.
ப.வேலுார் தாலுகா, கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 28 காலை கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, காலை, 5:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி
நடந்தது.
தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவம் இரவு அண்ணம், ரிஷபம், மயில், யானை, புஷ்ப குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தலைமையில் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி
நடந்தது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப, இளநீர் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தினர்
செய்திருந்தனர்.