தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டல குழு கூட்டத்தில், 5.51 கோடி ரூபாய் செலவிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டல குழு கூட்டம், தலைவர் காமராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல குழு தலைவர் கூறினார்.
தொடர்ந்து, தெருவிளக்கு பராமரிப்பு, மழை நீர் கால்வாய் சீரமைப்பு, கல்யாண் நகர் நகராட்சி பள்ளியில், 10 லட்சம் ரூபாய் செலவில் 'ஷெட்' அமைத்தல் உட்பட 5.51 கோடி ரூபாய் பணிகளுக்கு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.