திருத்தணி,---திருத்தணி தாலுகாவில், 74 வருவாய் கிராமங்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், வேர்க்கடலை, காய்கறி மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட பயிர்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் எலிகள் புகுந்து பயிர்களை சேதப்படுகின்றன. உதாரணமாக, திருத்தணி அடுத்த, மாமண்டூர், அருங்குளம், லட்சுமாபுரம், குன்னத்துார், நாபளூர், புச்சிரெட்டிப்பள்ளி உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் நெற்பயிர் செய்துள்ளனர்.
இந்நிலையில், நெற்பயிரில் எலிகள் புகுந்து நெற்பயிரை கடித்து குதறுகிறது. அதேபோல் காட்டுப்பன்றிகள் நெற்பயிரில் புகுந்து சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் பயிருக்கு செய்த செலவைக்கூட திருப்பி எடுக்க முடியாமல், நஷ்டம் அடைகின்றனர்.
எனவே, நெற்பயிரை சேதப்படுத்தும் பன்றிகள் மற்றும் எலிகளைக் கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டு ம் என, திருத்தணி தாலுகா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.