காஞ்சிபுரம், -காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 787 பேருக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் நேற்று உடல் தகுதித் தேர்வு துவங்கியது.
இத்தேர்வு வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் உடல் தகுதித் தேர்வில் 420 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் எடை, உயரம், மார்பளவு சரிபார்ப்பு, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தன.
இன்று 367 பேருக்கு உடல் தகுதித் தேர்வு நடக்கிறது. உடல் தகுதித் தேர்வு நடக்கும் இடத்தில், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., பகலவன் மற்றும் மாவட்ட எஸ்.பி., சுதாகர் ஆகியோர் பார்வையிட்டனர். வரும் 10ம் தேதி காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நிறைவு பெறுகிறது.