கும்மிடிப்பூண்டி,--கும்மிடிப்பூண்டி பஜாரில், தனியாருக்கு சொந்தமான இருபாலர் அழகு நிலையம் இயங்கி வருகிறது.
அதில், நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்கள் சிலர் வேலை பார்த்து வருகின்றனர்.
அந்த அழகு நிலைய வாசலில், நேபாள பெண்களும், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பெண்களும், தலை முடியை பிடித்துக் கொண்டு, சாலையோர நடைபாதையில் கட்டிப் புரண்டு சண்டை போடும் 'வீடியோ' ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கும்மிடிப்பூண்டி போலீசார் தகவல் அறிந்து, நேற்று விசாரித்த போது, இரு மாதங்களுக்கு முன், அந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் நேபாள பெண் ஒருவருக்கும், பேக்கரி ஒன்றில் மாஸ்டராக வேலை பார்க்கும் நபருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
அதைத் தெரிந்து கொண்ட மாஸ்டரின் மனைவி, சில பெண்களுடன் அழகு நிலையம் சென்று, நேபாள பெண்களிடம் தகராறு செய்து சண்டை போட்டது தெரியவந்தது.
அந்த சம்பவத்திற்கு பின், நேபாள பெண்கள் வேலையை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. புகார் ஏதும் இல்லாததால், போலீஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.