கோவை:புலியகுளத்தில் உள்ள கப்பல்படை சிறுவர்கள் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நேற்று முன்தினம் ஐ.என்.எஸ்., அக்ரானி வளாகத்தில் நடந்தது.
விளையாட்டு விழாவை முன்னிட்டு மாணவர்கள் நான்கு குழுக்கலாக பிரிக்கப்பட்டு, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் சிலம்பம், கராத்தே உள்ளிட்டவை செய்து காட்டினர்.
விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகள் எடுத்து, விஷ்வாஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.எக்தா அணி இரண்டாமிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஐ.என்.எஸ்., அக்ரானி கமாண்டிங் அலுவலர் மன்மோகன் சிங் பரிசுகளை வழங்கினார்.விளையாட்டு விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.