திருப்பூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 4ம் தேதி துவங்கியது. பள்ளி அணிகள், 96, கல்லுாரி அணிகள், 26, பொதுப்பிரிவில், 41, அரசு ஊழியர் தரப்பில், 12, என, 138 ஆண்கள் அணி, 37 பெண்கள் அணி என மொத்தம், 175 அணிகள் பங்கேற்றன.
மாணவர் பிரிவில்,சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடம், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றது. மாணவியர் பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி முதலிடம், குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம்.
கல்லுாரி மாணவர் பிரிவில் உடுமலை அரசு கல்லுாரி முதலிடம், காங்கயம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன், பல்லடம் அரசு கல்லுாரி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாமிடம். மாணவியர் பிரிவில் ஏ.வி.பி., கல்லுாரி முதலிடம், உடுமலை வித்யாசாகர் இரண்டாமிடம், எல்.ஆர்.ஜி., கல்லுாரி மூன்றாமிடம்.
பொதுப்பிரிவு (ஆண்கள்) முதலிடம் டால்பின் கிளப், காரல்மார்க்ஸ் கிளப் இரண்டாமிடம்,சி.எஸ்.சி., செட்டிபாளை யம் மூன்றாமிடம். பொதுப்பிரிவு (பெண்கள்) டாலர்சிட்டி கிளப் முதலிடம், வி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் கிளப், ஜே.யூனிக்கார்ன் அணி முறையேஇரண்டாம் மற்றும் மூன்றாமிடம்.
அரசு ஊழியர் (ஆண்கள்) மாவட்ட போலீஸ் அணி முதலிடம், கல்வித்துறை உடற்கல்வி ஆசிரியர் அணி இரண்டாமிடம், மூலனுார் ஆசிரியர் குழு அணி மூன்றாமிடம்.
பெண்கள் பிரிவில், கேத்தனுார் அரசு பள்ளி ஆசிரியர் குழு முதலிடம், மாவட்ட மருத்துவத்துறை அணி இரண்டாமிடம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி ஆசிரியர் அணி மூன்றாமிடம்.
மாவட்ட போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு, 3 ஆயிம் ரூபாய். இரண்டாவது மற்றும் மூன்றாமிடம் பெற்ற அணிக்கு முறையே, 2 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இன்று நஞ்சப்பா பள்ளியில், இருபாலர் பொதுப்பிரிவினருக்கான கூடைப்பந்து போட்டி நடக்கிறது.