வந்தவாசி:வந்தவாசியில் பர்னிச்சர்கடையில், 15 லட்சம் ரூபாய் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், அச்சரப்பாக்கம் சாலையில் இஷாத் என்பவர், 'பர்னிச்சர், எலக்ட்ரானிக்' பொருட்கள் கடை வைத்துள்ளார்.
நேற்று முன் தினம் காலை கடையை திறந்த போது, இரண்டு கல்லாப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, 15 லட்சம் ரூபாய் திருட்டு போயிருந்தது.
வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணையில், கடையின் இரண்டாவது தளத்தின் தகரக்கூரையை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், கழிவறை வழியாக கடையினுள் புகுந்து, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.