புதுச்சேரி :புதுச்சேரி- பெங்களூர் விமானம் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் 80 பேர் பயணிக்க கூடிய இரண்டு விமான சேவைகள் புதுச்சேரியில் நாள் தோறும் இயங்கி வந்தது.
ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விமானம், புதுச்சேரியில் இருந்து பெங்களூர் செல்கிறது. பின்னர் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் சென்றடைகிறது.
இந்நிலையில், பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 17ம் தேதி வரை புதுச்சேரி-பெங்களூர் விமான சேவை மட்டும் 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி- ைஹதராபாத் சேவை மட்டும் வழக்கம் போல் இயங்கும்.
பனிமூட்டம் காரணமாக நேற்று ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விமானம் 1:30 மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் விமான சேவை நேரங்கள் மாற்றி இயக்கப்பட்டது.