திருச்சி : திருச்சி அருகே நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், நாகூர் தர்கா பற்றியும், மதங்கள் பற்றியும் அவதுாறு பேசியதாக, 'தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை சேர்ந்த, 33 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, நாகூர் தர்கா தலைவர் கலிபா சாகிப் உள்பட நான்கு பேர், சிறுகனுார் போலீசில் புகார் அளித்தனர்.அதன்படி, தவ்ஹீத் அமைப்பின் தலைவர் சுலைமான், பொதுச்செயலர் அப்துல் கரீம், செயலர் சித்திக், பேச்சாளர் சுலைமான், நிர்வாகக்குழு உறுப்பினர் சம்சுல்ஹா ரகுமானி உள்பட, 33 பேர் மீது, சிறுகனுார் போலீசார், வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.